ஐயோ கடவுளே.. வலியால் துடித்த மாணவிகள்… ‘வைரல் காய்ச்சல்’ என்று வார்டன் ஆடிய அசிங்க நாடகம்.. அரசு விடுதியில் நேர்ந்த விபரீதம்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. வலியால் துடித்த மாணவிகள்… ‘வைரல் காய்ச்சல்’ என்று வார்டன் ஆடிய அசிங்க நாடகம்.. அரசு விடுதியில் நேர்ந்த விபரீதம்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் சொந்த மாவட்டமான பாலமூருவில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் சுமார் 50 மாணவிகளுக்குக் கடுமையான உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டுத் துடிதுடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெப்பாய்ர் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்த மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு, புதன்கிழமை இரவு உணவாகச் சிக்கன்வழங்கப்பட்டுள்ளது. அதனைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுமார் 40 முதல் 50 மாணவிகளுக்குக் கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, வலியினைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

இந்தத் திடுக்கிடும் விபரீதம் வெளியில் தெரிந்தால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதி, ஆளுங்கட்சித் தலைவர்கள் மாணவிகள் கதறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதைத் தடுக்கத் தீவிரமாக முயற்சி செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், விடுதி வார்டன் இந்த உணவு நச்சுத்தன்மை விவகாரத்தை மூடி மறைப்பதற்காக, மாணவிகளுக்கு வெறும் ‘வைரல் காய்ச்சல்’தான் ஏற்பட்டுள்ளது எனக் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், மாணவிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே அரசு விடுதி மாணவிகளுக்கு நேர்ந்த இந்த அவல நிலை பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in