CRIME
“இப்படியும் ஒரு கல்நெஞ்சக்காரனா..?” போலீஸை கண்டதும் எகிறிய வேகம்.. பின்னால் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ..!!
உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் காவல்துறையினரின் வாகனச் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவர், வண்டியை நிறுத்தாமல் வேகமாக முடுக்கிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்தப் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளார். ஆனால், கீழே விழுந்த பெண்ணைக் காப்பாற்ற வண்டியை நிறுத்தாத அந்த பைக் ஓட்டி, அவரை அப்படியே நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். அவர்கள் ஓடிவந்து சாலையில் விழுந்து காயமடைந்த அந்தப் பெண்ணை மீட்டு, அவருக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்து அப் பெண்ணின் நலம் குறித்து விசாரித்தனர். தப்பியோடிய பைக் ஓட்டியைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
