காஞ்சிபுரத்தில் காணாமல் போன சிறுமி சென்னையில் மீட்பு.. என்ன நடந்தது..? போலீசார் தீவிர விசாரணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காஞ்சிபுரத்தில் காணாமல் போன சிறுமி சென்னையில் மீட்பு.. என்ன நடந்தது..? போலீசார் தீவிர விசாரணை..!!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காணாமல் போன 8 வயது சிறுமி பெஸ்டி, சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தாத்தா – பாட்டியுடன் வசித்து வந்த இந்தச் சிறுமி, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலைக்குத் தனியாகச் சென்றபோது திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையின் முடிவில், சென்னை கெல்ஸீஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் அச்சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி எவ்வாறு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்கு வந்தார் மற்றும் காப்பகத்திற்கு எப்படிச் சென்றார்? என்பது குறித்து காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in