“கல்யாணமான 4-வது மாசத்துல இப்படியொரு கொடூரமா..?” செல்போனை பிடுங்கி கணவன் செய்த காரியம்.. 21 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கல்யாணமான 4-வது மாசத்துல இப்படியொரு கொடூரமா..?” செல்போனை பிடுங்கி கணவன் செய்த காரியம்.. 21 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (21) என்ற இளம்பெண், திருமணமான நான்கே மாதங்களில் கணவரின் கடுமையான சந்தேகத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கும், தாம்பரம் அடுத்த படப்பை அழகூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவர் தீபக், தனது மனைவி ராஜேஸ்வரியின் நடத்தை மீது தீராத சந்தேகம் கொண்டு தினமும் வீட்டில் கடுமையான தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தீபக் அடிக்கடி ராஜேஸ்வரியின் செல்போனைப் பறித்து வாங்கி, அவர் யார் யாரிடம் எல்லாம் பேசுகிறார் எனச் சோதனை செய்ததோடு, அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசி மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மணிமங்கலம் காவல் நிலைய போலீசார், ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் மனரீதியாகக் கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மணிமங்கலம் போலீசார் தற்போது பெண்ணின் கணவர் தீபக்கை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இவர்களது திருமணம் நடந்து 4 மாதங்களே ஆவதால், இந்தத் தற்கொலையின் பின்னணியில் வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள் தனியாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in