LATEST NEWS
“2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி..”அவதூறுகளை உடைத்து வென்ற தாய்.. 8 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை..!!
மெக்சிகோ நாட்டின் டாக்ஸ்க்கோ நகரில், எட்டு வயது சிறுமி கேமிலா கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாடையும் உலுக்கியது. தோழியுடன் விளையாடச் சென்ற சிறுமி காணாமல் போன சில மணி நேரங்களில் சடலமாக மீட்கப்பட்டார்; அவர் வேண்டுமென்றே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்தின.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இது கெரெரோ (Guerrero) மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குடும்பத்தினருக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றம் இப்போது தாயாரிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குற்றவாளிகளான ஜோஸ் ரிகார்டோ “N” மற்றும் அக்ஸல் அலெஜாந்திரோ “N” ஆகிய இருவருக்கும் தலா 67 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேமிலா கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
