CRIME
“என் பிள்ளைக்கு கைகள் இல்லையே” கருவில் இருந்த குழந்தையையும் வேட்டையாடிய இஸ்ரேலிய ராக்கெட் நச்சுப் புகை.. கண்ணீர் விடும் பாலஸ்தீன தாய்…!!
பாலஸ்தீனத்தின் மத்திய காசா பகுதியில் உள்ள அல்-புரைஜ் அகதிகள் முகாமைச் சேர்ந்த 33 வயதான ஃபாயிகா அல்-அரீதி என்ற பெண்ணிற்கு, திருமணத்திற்குப் பிறகு 4 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பின் பெண் குழந்தை பிறந்துள்ளது. பல வருடக் காத்திருப்பிற்குப் பின் தங்களுக்குப் பிறந்த அந்த முதல் குழந்தைக்கு ‘நூர் அப்துல்’ எனப் பெயரிட்டுப் பெற்றோர் மகிழ்ந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை தனது இரண்டு கைகளும் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், கைகள் இன்றியே பிறந்துள்ள துயரம் அரங்கேறியுள்ளது.
இந்தக் கொடூரமான பிறவிக் குறைபாட்டிற்கு இஸ்ரேலியப் படைகள் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதல்களே காரணம் எனப் பாதிக்கப்பட்ட தாய் குற்றம் சாட்டியுள்ளார். கர்ப்பக் காலத்தில் ஃபாயிகா அல்-அரீதி அல்-புரைஜ் பகுதியில் இருந்தபோது, அண்டை வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் நடத்திய தீவிரம் வாய்ந்த ராக்கெட் வீச்சு மற்றும் குண்டுவெடிப்புகளின் நச்சுப் புகையை அவர் சுவாசித்துள்ளார். தாயின் கருப்பையிலிருந்த கருவையும் துரத்தித் தாக்கிய இந்த நச்சுப் புகையின் வீரியம் காரணமாகவே, குழந்தையின் கைகள் வளராமல் போயுள்ளதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் தொடரும் போரினால் பிறக்கும் பிஞ்சுக் குழந்தைகளும், இன்னும் பிறக்காத கருக்களும் கூட எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது. போர்ச் சூழலில் முறையான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத நிலையில், இது போன்ற பல குழந்தைகள் கடுமையான பாதிப்புகளுடன் பிறந்து வருவதாகப் பாலஸ்தீன சுகாதாரத் துறை வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. நூர் அப்துல் என்ற இந்தக் குழந்தையின் நிலை, காசாவில் அப்பாவிப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மனிதநேயப் பேரழிவை உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளது.
