“சாப்பாடு, கல்வி, இருப்பிடம் எதுவும் இல்லை..” போர்நிறுத்தம் அறிவித்தும் ஓயாத கொடூரம்..! காசாவில் 340 குழந்தைகள் பலி.. கதறும் யுனிசெப்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சாப்பாடு, கல்வி, இருப்பிடம் எதுவும் இல்லை..” போர்நிறுத்தம் அறிவித்தும் ஓயாத கொடூரம்..! காசாவில் 340 குழந்தைகள் பலி.. கதறும் யுனிசெப்..!!

Published

on

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரம் போர்நிறுத்தத்திற்கு முரணானவை என்று யுனிசெப் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ பிரஸ் கூறினார். கடந்த 2 வாரங்களில் மட்டும் காசாவில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 5 சிறுவர்களும் 2 சிறுமிகளும் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 33 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 சிறுவர்களும் உயிரிழந்ததாக பைரஸ் கூறினார்.

போரின் விளைவுகள் காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதித்து வருவதாக அவர் மேலும் கூறினார். அவர்களின் இருப்பிடம் முதல் உணவு மற்றும் கல்வி வரை அனைத்தும் நெருக்கடியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 2023ல் மோதல் தொடங்கியதிலிருந்து, காசாவில் கிட்டத்தட்ட 8 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் முகாம்களிலோ அல்லது அபாயகரமாக சேதமடைந்த கட்டிடங்களிலோ வசித்து வருகின்றனர்.

Advertisement

கிட்டத்தட்ட 60,000 குழந்தைகள் போரினால் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். மேலும், அவர்களில் ஏறக்குறைய அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான மனநல ஆதரவு தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார். காசாவில் குளிர்காலம் வரவிருக்கும் நிலையில் யுனிசெப் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in