“அம்மா இனி வரமாட்டாங்களா..?” தாயைப் பறித்த கொடூரத் தீ… கதறி அழுத 3 வயது சிறுமி..! காஸாவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா இனி வரமாட்டாங்களா..?” தாயைப் பறித்த கொடூரத் தீ… கதறி அழுத 3 வயது சிறுமி..! காஸாவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!

Published

on

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு இடையே, காஸா நகரில் உள்ள முக்கியக் குடியிருப்புக் கட்டடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின் கோர முகமாக அப்பாவி பொதுமக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நடந்த வான்வழித் தாக்குதலில் அப்பகுதியில் இருந்த ஒரு வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 33 வயதான ரீம் அசாத் அவாத் என்ற பாலஸ்தீனப் பெண் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்றொரு தாக்குதலில் ஏற்கெனவே கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயின் உயிரைப் பறித்த இந்த பயங்கர தீ விபத்தின் போது, அவரது 3 வயது பெண் குழந்தையான மர்யம் கானெம் வீட்டின் ஒரு பகுதியில் தனியாகச் சிக்கிக் கொண்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அந்தச் சிறுமி பயந்து கதறி அழுத சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினரும் உள்ளூர் ஊடகவியலாளர்களும் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சிறுமியைப் பத்திரமாக மீ மீட்டனர். தீயில் சிக்கிப் படுகாயமடைந்த சிறுமி மர்யம் கானெம், தற்போது காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

தீப்பிழம்புகளுக்கு நடுவே தாயை இழந்து, தனியாளாகச் சிறுமி மீட்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக மக்களைப் பெரிதும் கண் கலங்கச் செய்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டு காஸாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு, பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in