டெலிவரி பாய் உடையில் வந்த எமன்.. பயத்தில் கத்தி அழுதுகொண்டே ஓடிவந்த சிறுமி.. CCTV-யை பார்த்த பெற்றோரின் நெஞ்சே உறைந்துபோன கொடூரக் காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

டெலிவரி பாய் உடையில் வந்த எமன்.. பயத்தில் கத்தி அழுதுகொண்டே ஓடிவந்த சிறுமி.. CCTV-யை பார்த்த பெற்றோரின் நெஞ்சே உறைந்துபோன கொடூரக் காட்சி..!!

Published

on

இந்தோனேசியாவில் பெரும் கொந்தளிப்பையும் பொதுமக்களின் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள ஒரு அதிர்ச்சிச் சம்பவம் குறித்து, தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த மர்ம நபரை அனைவரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறுமி பயத்தில் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் தனது வீட்டிற்கு ஓடிவந்துள்ளார். அவளது இந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சோதித்தபோது தான் அங்கு நடந்த கொடூரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் நேரத்தில், உணவு அல்லது பார்சல் விநியோகம் செய்யும் டெலிவரி டிரைவர் உடையணிந்த மர்ம நபர் ஒருவர், முகவரியைத் தேடுவது போல் நடித்து அந்தப் பகுதியில் நடமாடியுள்ளார். யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவர் அந்தச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என இந்தோனேசியா முழுவதும் மக்கள் காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in