நள்ளிரவில் பயங்கரம்.. சுதாகர் சுவாமி வீட்டில் நள்ளிரவு புகுந்து கொலைவிட்டு.. மர்ம கும்பல் செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் பயங்கரம்.. சுதாகர் சுவாமி வீட்டில் நள்ளிரவு புகுந்து கொலைவிட்டு.. மர்ம கும்பல் செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டம் சௌட்டுப்பல் நகரில், ‘ஜோகினி’ என்று அழைக்கப்படும் ராலபண்டி சுதாகர் மர்ம நபர்களால் நள்ளிரவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வீட்டிற்குள் புகுந்த கும்பல், சுதாகரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் சௌட்டுப்பல் நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அக்கும்பல் வீட்டில் இருந்த சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. மேலும், காவல்துறையினரிடம் மாட்டாமல் தப்பிப்பதற்காக, உயிரிழந்த சுதாகரின் சொந்தக் காரையே எடுத்துக்கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சௌட்டுப்பல் போலீசார், தடய அறிவியல் குழுவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து முக்கியத் தடயங்களைச் சேகரித்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in