CRIME
“கத்தியால் குத்தி… செங்கலால் அடித்து…” மனைவியைக் கொடூரமாக கொன்று கணவன் செய்த பகீர் காரியம்.. 8 பிள்ளைகளின் கதி என்ன..? நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் பூர்வா கச்சேலியா கிராமத்தில், குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக 52 வயது கணவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லால்புத் ரத்தோர் என்ற அந்த நபர், தனது 50 வயது மனைவி ஜானுகா தேவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் மனைவியைக் கத்தியால் குத்தியதோடு, செங்கலால் அவரது தலையைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
எட்டு குழந்தைகளுக்குத் தாயான ஜானுகா தேவியைக் கொலை செய்த பிறகு, குற்ற உணர்ச்சியிலும் பயத்திலும் கணவர் லால்புத் ரத்தோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரே நாளில் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் அந்த 8 பிள்ளைகளின் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கோடூரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, விபரீத முடிவுக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
