LATEST NEWS
டெல்லிக்கு போன ரகசிய அறிக்கை.. கூண்டோடு கலைக்கப்படும் தமிழக பாஜக தலைமை..? அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு..!!
தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கட்சியின் மாநில மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் தலைமையிலான குழு தயாரித்து டெல்லியில் சமர்ப்பித்துள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்குப் பிறகு கட்சித் தளம் முடங்கியுள்ளதாகவும், தற்போதைய நிர்வாகிகள் சரிவர களப்பணியாற்றவில்லை என்றும் அந்த ரகசிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மாநிலத் தலைமையின் கீழ் உள்ள சிலர் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், மக்கள் பணிகளைத் தவிர்த்து வெறும் விளம்பர அரசியலை மட்டுமே முன்னெடுப்பதாகவும் டெல்லி தலைமைக்குக் குற்றச்சாட்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடங்கிய தற்போதைய தமிழக பாஜக தலைமையைக் கூண்டோடு கலைக்க இக்குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை பாஜக தேசியத் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழக பாஜகவில் விரைவில் பெரிய அளவிலான அதிரடி மாற்றங்களும், புதிய நிர்வாகிகள் நியமனமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய இந்த உள்கட்சி விவகாரம், தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
