“அய்யய்யோ… தெரியாமல் குடித்த ஒரே ஒரு க்ளாஸ் பால்…” மொத்த கிராமத்தையும் மருத்துவமனைக்கு ஓட வைத்த பகீர் சம்பவம்..! பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யய்யோ… தெரியாமல் குடித்த ஒரே ஒரு க்ளாஸ் பால்…” மொத்த கிராமத்தையும் மருத்துவமனைக்கு ஓட வைத்த பகீர் சம்பவம்..! பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இது. அங்குள்ள ஒரு பசுவை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இந்த விஷயம் ஆரம்பத்தில் யாருக்கும் சரியாகத் தெரியாத நிலையில், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பசுவின் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற துர்கா பூஜையின் போது, அதே பசுவின் பாலிலிருந்து ‘சரணாம்தம்’ தயாரிக்கப்பட்டு கிராம மக்களுக்கும் அருகில் உள்ள கோவிந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. மேலும், அந்தப் பசுவின் பால் சில கடைகளுக்கும் வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டதும் தெரியவந்தது.

Advertisement

பசு இறந்த பிறகு, அது வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியதால் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 450 பேர் மருத்துவமனைக்குச் சென்று ஆன்டி-ரேபிஸ் (Anti-Rabies) தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கிடையே, சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சரணாம்தம் தயாரிப்பதற்கு முன்பு பால் நன்கு கொதிக்க வைக்கப்பட்டு, பின்னர் தயிராக மாற்றப்படுவதால் கிருமித்தொற்றுக்கு வாய்ப்பில்லை; எனவே பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in