CRIME
“சாப்பாட்டில் என்ன கலந்தது..?” அடுத்தடுத்து பலியான 8 மற்றும் 10 வயது குழந்தைகள்.. சித்தி செய்த சதியா..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு மண்டலம் பிராமண கோடூரு கிராமத்தில், நித்யா (8) மற்றும் சாத்விக் (10) ஆகிய இரண்டு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ஆம் தேதி உணவில் விஷம் கலந்ததால் கடுமையான உடல்நலக்குறைவுக்கு ஆளான இக்குழந்தைகள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மரணங்களில் குழந்தைகளின் சித்தி மேரி மீது தங்களுக்கு வலுவான சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தைகளின் மரணத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தந்தை ராம்பாபு மற்றும் சித்தி மேரி ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் ஜீப் மீதும் கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தற்போது பொன்னூரு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது உணவு நச்சுத்தன்மையால் ஏற்பட்ட விபத்தா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
