“இனி தப்ப முயன்றால்.. ” புழல், தேனி சம்பவங்களுக்குப் பின் சிறைத்துறை எடுத்த அதிரடி முடிவு.. கைதிகளுக்கு மரண பயத்தைக் காட்டும் அரசு..!! – cinefeeds
Connect with us

CRIME

“இனி தப்ப முயன்றால்.. ” புழல், தேனி சம்பவங்களுக்குப் பின் சிறைத்துறை எடுத்த அதிரடி முடிவு.. கைதிகளுக்கு மரண பயத்தைக் காட்டும் அரசு..!!

Published

on

தேனி மற்றும் புழல் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சிச் சம்பவங்களை அடுத்து, தமிழகச் சிறைத்துறை வளாகங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த அதிரடியான புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதுவரை சிறைகளின் கண்காணிப்பு கோபுரங்களில் வாக்கிடாக்கி மற்றும் பைனாகுலர் போன்ற உபகரணங்களுடன் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்த சிறைக் காவலர்களுக்குப் பதிலாக, இனி துப்பாக்கி ஏந்திய போலீசாரைப் பணியமர்த்தச் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. சிறைகளில் இருந்து கைதிகள் தப்ப முயல்வது மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி, சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓட முயலும் பட்சத்தில், அங்குள்ள அசாதாரணச் சூழலுக்கு ஏற்ப அவர்களைச் சுட்டுப்பிடிப்பதற்கான பிரத்யேக உத்தரவுகளைப் பிறப்பிக்கச் சிறைத்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள முக்கியச் சிறைகளின் பாதுகாப்பு குறித்த தணிக்கை மற்றும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தணிக்கை முழுமையாக முடிந்தவுடன் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகளைச் சிறைத்துறை விரைவில் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in