“திமுகவுக்கு இல்ல… தமிழ்நாட்டுக்கே திக் திக் நிமிடம்..!” தவெக அரசை அதிரவைத்த கனிமொழியின் அதிரடிப் பேச்சு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவுக்கு இல்ல… தமிழ்நாட்டுக்கே திக் திக் நிமிடம்..!” தவெக அரசை அதிரவைத்த கனிமொழியின் அதிரடிப் பேச்சு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த கடந்த 5 மாதங்களில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். சென்னை எண்ணூர், செஞ்சி, ராணிப்பேட்டை போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், குற்றவாளிகள் தவெக ஆட்சியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற தெனாவட்டுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசியதை நினைவுகூர்ந்த கனிமொழி, தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாக விமர்சித்தார். ‘தாய்மாமன் சீர்’ என்று தவெக தரப்பில் கூறப்படுவதை சாடிய அவர், பொதுமக்களைப் பாதுகாக்க தவெக அரசு தவறிவிட்டதாகக் கூறினார். மேலும், திமுகவிற்கு ‘திக் திக் நிமிடம்’ என்று தவெக ஐடி விங் விமர்சித்ததற்குப் பதிலடியாக, தற்போதைய தவெக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே திக் திக் நிமிடமாகத்தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும், தனது எக்ஸ் தளப் பதிவிலும் தவெக அரசின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து கனிமொழி காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த அவர், தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “விஜய் மாமா” என்று அழைத்து வாக்களித்த குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருப்பதில் என்ன பயன் என்றும், சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாவிட்டால் அந்தத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுமாறும் தனது பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in