LATEST NEWS
“இனி அரசு வேலை என்பதே கிடையாதா..?”டிஎன்பிஎஸ்சி படிப்பவர்களுக்கு ஷாக்… கனிமொழி எழுப்பிய கேள்வியின் பின்னணி என்ன..?!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு நிதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான தற்காலிக ஊழியர்களை இந்த நிறுவனம் மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது போராடும் ஒப்பந்த ஊழியர்களை ஒடுக்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், OMCL நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கி வரும் தவெக அரசு, இனி நிரந்தர அரசுப் பணிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க முயல்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
