LATEST NEWS
“குழந்தையின் அப்பா தான் காரணம்” அதான் வீசினேன்.. CM வீட்டின் அருகே தொப்புள்கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை.. தாய் சொன்ன பரபரப்பு வாக்குமூலம்…!!
சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய் இல்லத்தின் அருகே தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையைக் கைவிட்ட பெற்ற தாயை நீலாங்கரை போலீசார் கண்டறிந்துள்ளனர். நேற்று முன் தினம் காலையில் கபாலீஸ்வரர் நகர் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், குழந்தையின் அழுகுரல் சத்தத்தைக் கேட்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார், பிறந்து சில மணி நேரமேயான அக்குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தற்பொழுது குழந்தை நலமுடன் உள்ளது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. நள்ளிரவு நேரத்தில் இரு பெண்கள் அங்கு வருவதும், அதில் ஒரு பெண் கையில் இருந்த பையிலிருந்து குழந்தையை எடுத்துச் சாலையோரம் வீசிவிட்டு, கண்ணீர் மல்கத் திரும்பிச் செல்வதும் அதில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தைக் கொண்டு நடத்திய தேடுதல் வேட்டையில், அதே பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவரைக் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்ட பெண்ணே அக்குழந்தையின் தாய் என்பது உறுதி செய்யப்பட்டது. தனக்குத் திருமணமாகாத நிலையில் வீட்டிலேயே இக்குழந்தை பிறந்ததாகவும், குழந்தையின் தந்தை எவ்வித ஆதரவும் தராததால் குழந்தையை வளர்க்க விருப்பமின்றி வீசிச் சென்றதாகவும் அத்தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தற்பொழுது அரசு குழந்தைகள் நலக்குழுவின் பொறுப்பில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
