LATEST NEWS
“இனி பெண்களுக்குப் பயமே இல்லை..” அரசு பஸ்களில் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.. முதலமைச்சர் விஜய்யின் மெகா திட்டம்..!!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளின் நிகழ்விடத்தைக் கண்டறியும் டிராக்கிங் சாதனங்கள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்துவதற்கு ரூ.17.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிநவீன வசதி மூலம் பேருந்துகளில் பயணிகளின், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பேருந்துகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக ஒரு பிரத்யேகக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுச் செயல்பட உள்ளது. பேருந்துப் பயணத்தின் போது ஆபத்தான அல்லது அவசரச் சூழல் ஏற்பட்டால், இந்த அவசர உதவிப் பொத்தானை அழுத்திய உடனே, கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்தின் லொகேஷன் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, பயணிகளுக்குத் தேவையான அவசர உதவி உடனடியாக வந்தடையும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
