LATEST NEWS
அம்பை இடைத்தேர்தல் வியூகம்.. மகன் ஓபிஆருக்காகப் பிள்ளையார் சுழி போட்ட ஓபிஎஸ்… தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!!
திமுக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல், முதல்முறையாகத் தற்போதைய அரசுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் குரல் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய விபரீதம் மற்றும் சிறப்புச் சார்பு ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது வரையிலான தொடர் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து, அவர் அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவாகச் செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பொதுப் பேட்டிகளில் கூட அதிகம் பேசாத ஓபிஎஸ், தற்போது திடீரென அரசுக்கு எதிராகப் பேசத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்தின் இந்தத் திடீர் அரசியல் வேகம், வரவிருக்கும் இடைத்தேர்தலை மையமாகக் கொண்டே ஆரம்பமாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், தனது மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தை வேட்பாளராகக் களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அரசியல் தளத்தை உருவாக்கவே தற்போதிருந்தே திமுக அரசை அவர் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
