“பழிவாங்க ஆடுகளைக் கொன்ற கொடூரம்..” அமைச்சர் உறவினர் என்பதால் போலீஸ் மெத்தனம்..? கதறும் புகார்தாரர்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பழிவாங்க ஆடுகளைக் கொன்ற கொடூரம்..” அமைச்சர் உறவினர் என்பதால் போலீஸ் மெத்தனம்..? கதறும் புகார்தாரர்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பனைவிளை கிராமத்தில், முன்பகை காரணமாக ஆடுகளைக் கொன்றதாக அமைச்சரின் சித்தப்பா மீது காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர் அமைச்சரின் மிக நெருங்கிய உறவினர் என்பதால், காவல்துறையினர் அவர் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாகப் புகார்தாரர் வேதனையுடன் புலம்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனைவிளை கிராமத்தில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான ஊர்க்கிணற்றை, ஜெகதீஸ்வரி அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு அவரது உறவினர்கள் திடீரெனத் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி ஆக்கிரமிக்க முயன்றதாக ஏற்கனவே ஒரு புகார் எழுந்தது. பொதுமக்களுக்குப் பயன்பட்டு வந்த இந்தக் கிணறு விவகாரத்தால், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சரின் குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான பகை ஏற்பட்டுள்ளது. அந்த ஊர்க்கிணறு தகராறின் தொடர்ச்சியாகவே, தற்போது ஆடுகளைக் கொன்று பழிவாங்கும் அளவிற்கு இந்த முன்பகை முற்றியுள்ளதாகக் கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in