LATEST NEWS
அட கொடுமையே..! கொதிக்கும் கஞ்சியில் தவறி விழுந்த சிறுமி பலி… விளையாடிக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம்…!!
கூடுவாஞ்சேரி அருகே சோறு வடித்த கஞ்சியில் எதிர்பாராதவிதமாக விழுந்த 4 வயது சிறுமி அவந்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிலர், செங்கல்பட்டு மாவட்டம் தைலாவரம் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி, பூம்பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவர்களில் வல்லாள வெங்கடேஸ்வரலு என்பவரின் 4 வயது குழந்தையான அவந்திகா, கடந்த தீபாவளி பண்டிகையன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான சோற்றுக் கஞ்சியில் தவறி விழுந்து அலறியுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பிஞ்சு குழந்தை, தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
