CRIME
நள்ளிரவில் லிவ்-இன் காதலியுடன் கறி சமைத்து சாப்பிட்ட ஐடி இன்ஜினியர்.. திடீரென நடந்த பகீர் சம்பவம்… காதலி மற்றும் மாமியார் அதிரடி கைது..!
கொல்கத்தாவில் லிவ்-இன் உறவில் தன் காதலியுடன் வசித்து வந்த 25 வயது மென்பொருள் பொறியாளர் சார்த்தக் சர்க்கார், நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் கழுத்து மற்றும் தோள்பட்டையில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சால்ட் லேக் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு மாடி குடியிருப்பில் காதலி சஞ்சலிகா பாசு மற்றும் அவரது தாயாருடன் வசித்து வந்த விஷயம் சார்த்தக்கின் தந்தைக்குத் தெரியாது எனப் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சார்த்தக் மற்றும் சஞ்சலிகா இருவரும் கடந்த 7-ஆம் தேதி மதியம் வெளியே சென்று புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை வாங்கிக்கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட வாக்குவாதம், நள்ளிரவில் கைக்கலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலின் போது சார்த்தக்கின் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கொல்கத்தா போலீஸார், சார்த்தக்கின் காதலி சஞ்சலிகா பாசு மற்றும் அவரது தாய் மௌமிதா ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாகத் தம்பதியினர் மற்றும் காதலர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள், இது போன்ற கொடூரக் கொலைகளிலும் குற்றச் சதிகளிலும் முடிவது சமூகத்தில் உறவுகளுக்கு இடையே உள்ள சகிப்புத்தன்மையின்மையைப் பிரதிபலிப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
