LATEST NEWS
மனுஷங்கதானா இவங்க…?! துண்டு துண்டாக வெட்டி… மைதா மாவு தடவி… கூடுவாஞ்சேரியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சைக்கோ கொலை..!!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஹயாத் நிஷா என்ற அப்பெண், தன்னுடனே ஒரே வீட்டில் வசித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் தம்பதியால் கொலை செய்யப்பட்டுள்ளார். வண்டலூரில் இருந்து பெண்ணின் உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து மின்சார ரெயில் மூலம் எடுத்துச் சென்று, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா நோக்கி புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனுப்பி வைத்திருப்பது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆக்ராவில் கண்டெடுக்கப்பட்ட சிகப்பு நிற சூட்கேஸ் குறித்து சென்ட்ரல் ரெயில்வே போலீசார் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள கொலையாளிகளின் வீட்டை போலீசார் கண்டறிந்தனர்.
கூடுவாஞ்சேரியில் உள்ள கொலையாளிகளின் வீட்டிற்குள் போலீசார் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில் ஹயாத் நிஷாவின் துண்டிக்கப்பட்ட உடலின் சதை பாகங்கள் போட்டு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த சதைகள் மீது மைதா மாவு தடவி வைக்கப்பட்டிருந்ததோடு, அண்டாவில் சதை பாகங்களுடன் காய்கறிகளும் சேர்க்கப்பட்டு வேக வைத்தது போல் காணப்பட்டது. வீடு முழுவதும் ரத்தக் கறைகளுடன் காணப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அந்த தம்பதி சமைக்க முயன்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
கொலை நடந்த இடம் கூடுவாஞ்சேரி என்பதால் உதவி கமிஷனர் சேகர்பாபு தலைமையிலான கூடுவாஞ்சேரி போலீசார் இக்கொடூர கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தப்பி ஓடிய இளம் தம்பதியை பிடிப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே வீசப்பட்ட தலையை கண்டுபிடிக்க முடியும் என்பதால், அழுகிய நிலையில் இருக்கலாம் எனக் கருதப்படும் தலையைத் தேடும் பணியும் தம்பதியை பிடிக்கும் நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
