CRIME
“உன்னை கல்யாணம் பண்ண முடியாது.. ” காதலன் சொன்ன வார்த்தை.. 21 பக்கக் கடிதம் எழுதி வைத்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நடுரோட்டில் சாலை மறியல்..!!
மகபூபாபாத் மண்டலத்திற்கு உட்பட்ட நாடிவாடா பகுதியில், காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த 24 வயது இளம்பெண் 21 பக்கக் கடிதம் எழுதி வைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சுஷ்மிதா (24) என்பவரும் அனில் என்ற இளைஞரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சாதி வித்தியாசத்தைக் காரணம் காட்டித் தனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறி, அனில் தொடர்ந்து திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுஷ்மிதா, தனது வேதனைகள் அனைத்தையும் 21 பக்கக் கடிதமாக எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையில், சுஷ்மிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தங்களது மகளைக் கொலை செய்திருக்கலாம் என்றும் சுஷ்மிதாவின் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் 21 பக்கக் கடிதத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுஷ்மிதாவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகபூபாபாத் சுரங்கப்பாதை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
