“அம்மா… எங்கம்மா போற…?” பிளாட்பாரத்தில் பச்சிளம் குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்ற தாய்.. அழுது துடித்த பிஞ்சு குழந்தைகள்.. கண்கலங்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா… எங்கம்மா போற…?” பிளாட்பாரத்தில் பச்சிளம் குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்ற தாய்.. அழுது துடித்த பிஞ்சு குழந்தைகள்.. கண்கலங்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில், இரவோடு இரவாகத் தனது இரண்டு கைக்குழந்தைகளைப் பரிதவிக்கவிட்டு தாய் ஒருவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் உஜ்ஜைனி ரயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் உள்ள காத்திருப்புப் பகுதியில் 6 முதல் 7 மாதங்களே ஆன ஆண் குழந்தையையும், ஏறத்தாழ ஒன்றரை முதல் இரண்டு வயது நிரம்பிய பெண் குழந்தையையும் மர்மப் பெண் ஒருவர் தனியாக உட்கார வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பச்சிளம் குழந்தைகள் நீண்ட நேரமாக அழுதுகொண்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த பயணிகள் உடனடியாக அரசு ரயில்வே காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அநாதையாக அழுது கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

இதுகுறித்துத் தகவலறிந்த ரயில் நிலைய பொறுப்பாளர் சுனில் குப்தா கூறுகையில், மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் தற்போது ‘மாதிருச்சாலா’ என்ற அமைப்பின் பாதுகாப்பான கவனிப்பிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் குழந்தைகளை விட்டுச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. அந்தப் பெண் யார், குடும்பத்தினர் எங்குள்ளனர் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in