LATEST NEWS
ரத்தம் கொதிக்க வைக்கும் வீடியோ..! இந்திய கேப்டன் முகத்தில் எட்டி உதைத்த பாலஸ்தீன வீரர்… மைதானத்திலேயே தக்க பதிலடி கொடுத்த இந்தியா..!!
மலேசியாவில் நடைபெற்ற AFC U-17 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாலஸ்தீனம் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4-1 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனத்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய இளம் வீரர்கள் தங்களது திறமையை சர்வதேச அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர்.
போட்டியின் போது எதிர்பாராத விதமாக ஒரு விரும்பத்தகாத சம்பவம் அரங்கேறியது. பாலஸ்தீனிய வீரர் முகமது ஜம்ஹூர் ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் வன்முறையாக நடந்துகொண்டதோடு, இந்திய அணியின் கேப்டன் தல்லால்முவான் க்காங் டேவின் முகத்தில் எட்டி உதைக்கும் வகையில் ஆபத்தான முறையில் நடந்து கொண்டார். உலகளாவிய விளையாட்டு விதிமுறைகளுக்கும், விளையாட்டு உணர்வுகளுக்கும் முற்றிலும் எதிரான இந்தச் செயல் மைதானத்திலிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாலஸ்தீன அணியின் பயிற்சியாளர் யூசெப் ஷர்பாஜி மற்றும் அணியின் மேலாளர் ஆகியோர் உடனடியாக இந்திய அணித் தரப்பிடம் நேரில் வந்து வெளிப்படையாக மன்னிப்பு கோரினர். “எங்கள் வீரர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, அது தேவையற்ற மற்றும் கண்டிக்கத்தக்க செயலாகும்” என்று பயிற்சியாளர் வருத்தம் தெரிவித்தார். மேலும், இந்திய அணி இந்த வெற்றிக்கு முழுமையான தகுதியானது என்றும் அவர்களின் ஆட்டத்தை மனதாரப் பாராட்டியும் பேசினார். இதற்கிடையில், இந்திய கேப்டனை அவமதிக்கும் வகையிலும் உடல்ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்ட பாலஸ்தீன வீரர் மீதும், இச்சம்பவம் குறித்தும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தரப்பில் முறையான புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
