எங்ககிட்ட காசு இல்ல ஆனால் “த.வெ.க-வில் 60 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி”.. அவர்கள் வெளியேறினால் ஆட்சி மாற்றம் ஏற்படும்… முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எங்ககிட்ட காசு இல்ல ஆனால் “த.வெ.க-வில் 60 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி”.. அவர்கள் வெளியேறினால் ஆட்சி மாற்றம் ஏற்படும்… முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி..!!

Published

on

செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 60 முதல் 70 எம்.எல்.ஏக்கள் வரை ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க தி.மு.க முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் தி.மு.கவிற்கு இல்லை என்றும், யாரையும் விலை கொடுத்து வாங்கும் அளவுக்குத் தங்கள் கட்சியிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், அரசியல் ரீதியாக மனமாற்றத்தை உருவாக்கும் சக்தி தி.மு.கவிற்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், அதிருப்தியில் உள்ள த.வெ.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர் அந்த எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் ரகுபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதிருப்தியில் உள்ளவர்களில் 60 பேர் ஒன்றுசேர்ந்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெளியேறினால், ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகும் என்றும், அதற்கு தி.மு.க ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in