“உன் பொண்டாட்டி கர்ப்பமாக இருந்தா நீயே பஸ்ஸை ஓட்டிக்கோ” அந்த வார்த்தை சொன்னது ஒரு குத்தமா..? கர்ப்பிணிப் பெண்ணின் கணவரைத் திட்டித் தீர்த்த டிரைவர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன் பொண்டாட்டி கர்ப்பமாக இருந்தா நீயே பஸ்ஸை ஓட்டிக்கோ” அந்த வார்த்தை சொன்னது ஒரு குத்தமா..? கர்ப்பிணிப் பெண்ணின் கணவரைத் திட்டித் தீர்த்த டிரைவர்..!!

Published

on

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் (MGBS), தனது ஐந்து மாத கர்ப்பிணி மனைவி பயணிப்பதால் பேருந்தைச் சற்று கவனமாக ஓட்டுமாறு கணவர் ஒருவர் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பொறுமையாகப் பதிலளித்து நம்பிக்கை அளிக்க வேண்டிய ஓட்டுநர், கடும் கோபமடைந்து அந்த நபரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், “உன்னால் என்ன செய்ய முடியும்? உன் மனைவி கர்ப்பமாக இருந்தால், நீயே பேருந்தை ஓட்டிக்கொள்” என்று மிகவும் ஆணவத்துடனும் கடுமையாகவும் பதிலளித்துள்ளார்.

Advertisement

பேருந்து ஓட்டுநரின் இந்த மனிதாபிமானமற்ற செயலையும், வாக்குவாதத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொண்ட ஓட்டுநரின் செயலுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in