LATEST NEWS
BIG BREAKING: கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மாரடைப்பால் காலமானார்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு (75) இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணியளவில் காலமானார்.
நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் சென்னை அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
