15 அதிகாரிகள் நீக்கத்தில் மறைந்திருக்கும் ரகசியம் இதுதானா..? – டி.ஆர்.பி. ராஜா உடைத்த உண்மை… த.வெ.க. அரசுக்குப் புது தலைவலி.. அதிர்ச்சியில் அதிமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

15 அதிகாரிகள் நீக்கத்தில் மறைந்திருக்கும் ரகசியம் இதுதானா..? – டி.ஆர்.பி. ராஜா உடைத்த உண்மை… த.வெ.க. அரசுக்குப் புது தலைவலி.. அதிர்ச்சியில் அதிமுக..!!

Published

on

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு பெருமைமிகு நிறுவனமான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பை, தற்போதைய த.வெ.க. அரசே திட்டமிட்டுச் சிதைத்து வருவதாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தொழில் முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் இந்த அமைப்பிலிருந்து 15 ஆலோசகர்கள் அதிரடியாக நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசின் நிர்வாகத் திறமையின்மையே இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தற்போது வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பதை டி.ஆர்.பி. ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி அவர்களைப் பணியிலிருந்து வெளியேற்றவில்லை என்றும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக அவர்களது அனுபவத்தை மதித்துப் பணியில் தொடர அனுமதித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

Advertisement

ஆனால், தற்போதைய அரசு அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறியதோடு, புகழ்பெற்ற ஒரு அரசு நிறுவனத்தின் கட்டமைப்பையே சீர்குலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தகவல் கசிவு என்ற பெயரில் நடக்கும் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டுச் சூழலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் டி.ஆர்.பி. ராஜா தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in