LATEST NEWS
“என்னால் வளர்க்க முடியவில்லை..” 5-வது பிறந்த பெண் குழந்தை.. தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிறந்த சில நாட்களே ஆன தனது ஐந்தாவது பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் தாயொருவர் நர்சிங் ஹோமில் ஒப்படைக்கச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மதுவுக்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் இருப்பதால், ஏற்கனவே உள்ள குழந்தைகளின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்தத் தாய் கடுமையாகத் தவித்து வந்துள்ளார். இதன் காரணமாக, தனக்குப் பிறந்த ஐந்தாவது பெண் குழந்தையை வளர்க்க வழியின்றி, அலிகாரின் சுமேரா ஜால் பகுதியில் உள்ள ‘ஆதில் நர்சிங் ஹோம்’ என்ற தனியார் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை ஒப்படைக்க முயன்றுள்ளார்.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, குழந்தையைப் பணத்திற்காக விற்பனை செய்ய அந்தப் பெண் முயற்சிப்பதாகச் சந்தேகம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆதில் நர்சிங் ஹோம் தொடர்புடைய இந்தச் சம்பவத்தில், உண்மையிலேயே வறுமையின் காரணமாகக் குழந்தையை ஒப்படைக்க வந்தாரா அல்லது குழந்தை விற்பனை முயற்சி ஏதேனும் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
