பெண்களே ரொம்ப வலி இருக்கா..? மாதவிடாய் வலியை விரட்டியடித்த 3 மேஜிக் சப்ளிமெண்டுகள்… 37 ஆண்டு அனுபவத்தைப் பகிர்ந்த மாமாஎர்த் இணை நிறுவனர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெண்களே ரொம்ப வலி இருக்கா..? மாதவிடாய் வலியை விரட்டியடித்த 3 மேஜிக் சப்ளிமெண்டுகள்… 37 ஆண்டு அனுபவத்தைப் பகிர்ந்த மாமாஎர்த் இணை நிறுவனர்..!!

Published

on

மாமாஎர்த் இணை நிறுவனர் கசல் அலாக், 37 ஆண்டுகளாக தான் அனுபவித்து வந்த கடுமையான மாதவிடாய் வலியை மூன்று ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டதன் மூலம் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாமாஎர்த் நிறுவனம் சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் இணை நிறுவனரான கசல் அலாக் தனது மாதவிடாய் காலச் சிக்கல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பல்வேறு அணுகுமுறைகளை முயற்சி செய்து, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு தினமும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுக்கத் தொடங்கியதாகவும், தனது மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்களுக்கு, ஒரு நாளைக்கு மூன்று முறை மற்றும் மூன்று வேளை ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் படிப்படியாக மாதவிடாய் வலி குறைந்து, மயோ இனோசிட்டால், ஒமேகா மற்றும் மெக்னீசியம் ஆகிய மூன்று சப்ளிமெண்டுகளையும் சேர்த்துக் கொண்டதால் வலி முற்றிலும் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த மூன்று சப்ளிமெண்டுகளையும் மருத்துவரின் உரிய அனுமதியுடன் மட்டுமே எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி, வைட்டமின் பி1 மற்றும் மெக்னீசியம் ஆகியவை மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு உதவக்கூடும் என்றாலும், அவற்றை சிகிச்சைகளாகப் பரிந்துரைக்க போதுமான ஆராய்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

மெக்னீசியம் மாதவிடாய் வலியைக் குறைக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்தாலும், ஒரு நிலையான அணுகுமுறையை நிறுவுவது கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஒமேகா 3 சப்ளிமெண்டுகள் மாதவிடாய் காலங்களில் வலியைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும் அதற்கான சான்றுகள் குறைவாகவே காணப்படுகின்றன என்றும், மயோ இனோசிட்டால் என்பது வளர்சிதை மாற்ற மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்காகப் பரிந்துரைக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

எனவே, மாதவிடாய் காலங்களில் வலியை அனுபவிக்கும் பெண்கள், முதலில் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, சப்ளிமெண்டுகளுக்கான முறையான அளவு உள்ளிட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை மட்டுமே என்பதோடு, எந்த வகையிலும் மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாகாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in