CRIME
“ச்சீ.. நள்ளிரவில் பயங்கரம்.. ஆஸ்பத்திரியில் உறங்கிக்கொண்டிருந்த பெண் உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. வார்டுக்குள் புகுந்த மர்ம நபர் செய்த அதிர்ச்சிச் செயல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்குத் துணையாகத் தங்கியிருந்த பெண் உதவியாளர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வார்டில் நோயாளியின் படுக்கைக்கு அருகே தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை, மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த அதே நபர், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் உதவியாளர்களின் செல்போன்களையும் திருடிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் பாதுகாப்பு குறைபாட்டைப் பயன்படுத்தி அந்த நபர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போன் திருட்டு ஆகிய இரு கோணங்களிலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த நபரைத் தேடும் பணியையும், தீவிர விசாரணையையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
