LATEST NEWS
பகீர்… 10 ஆண்டுகள் சிகப்பழகு கிரீம் பயன்படுத்திய பாடகருக்கு நேர்ந்த கொடூர கதி.. பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மருத்துவர்களே அதிர்ந்த சம்பவம்..!1
சிகப்பழகு பெற வேண்டும் என்ற ஆசையில் ‘ஃபேர்னஸ் கிரீம்’ பயன்படுத்திய பாடகர் ஒருவர், தனது சிறுநீரகத்தைப் பறிகொடுத்து நோயாளியாக மாறியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகர் சலீம் கடத்தூர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அழகுக்காக அவர் தொடங்கிய இந்தப் பழக்கம், நாளடைவில் அவரது உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது.
ஆரம்பத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, சாதாரணப் பிரச்சினை எனக் கருதி சலீம் வழக்கமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் நிலைமை மோசமடைந்ததால், அவர் பெரிய மருத்துவமனை ஒன்றை நாடியுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தேகத்தின் பேரில் சிறுநீரகப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர்களும், சலீமும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஏனெனில், சலீம் தொடர்ந்து பயன்படுத்தி வந்த சிகப்பழகு கிரீம்களில் இருந்த நச்சு ரசாயனங்களால் அவரது சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிறுநீரக நோய்க்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, நீங்களும் சிகப்பழகு பெற வேண்டும் என்ற ஆசையில் மருத்துவர்களின் ஆலோசனையின்றி இதுபோன்ற கிரீம்களைப் பயன்படுத்தி வந்தால், உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இச்சம்பவம் உணர்த்தும் முக்கியப் பாடமாகும்.
