“நீ மட்டும் என்ன ஒழுங்கா.?” ஓஹோ இதுக்குதான் MLA அருள் விக்னேஷிடம் CM விஜய் கேள்வி கேட்கலையா..? உதயநிதி சொன்ன அந்த வார்த்தை.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ மட்டும் என்ன ஒழுங்கா.?” ஓஹோ இதுக்குதான் MLA அருள் விக்னேஷிடம் CM விஜய் கேள்வி கேட்கலையா..? உதயநிதி சொன்ன அந்த வார்த்தை.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பித் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்யக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, அத்தொகுதியின் ஆளுங்கட்சி (தவெக) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்குச் சென்று மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆட்சியர் கடந்த ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

Advertisement

இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்கு நேரில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் மனு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட ஆட்சியரிடம் பணியிட மாற்றம் பெற்றுக்கொள்ளுமாறு பேரம் பேசி, 116 நாட்களாகக் குற்றத்தை மூடிமறைக்க முயன்ற தலைமைச் செயலாளர் சாய்குமார் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், இத்தனை நாட்கள் இந்த விவகாரம் தெரியாமல் இருந்தாரா அல்லது தெரிந்தும் எம்.எல்.ஏ.வைக் காப்பாற்ற முயற்சிக்கிறாரா? ‘நீ மட்டும் ஒழுங்கா’ என்று திருப்பிக் கேட்டுவிடுவார் என்பதற்காகத்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காமல் மௌனம் காக்கிறாரா?” எனக் கடுமையாக விமர்சித்தார். இதேபோல், மனு கொடுக்க வந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in