“கேட்கும்போதே பிரமிப்பா இருக்கு..” திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடியில் 121 கிலோ தங்கம் காணிக்கை.. யார் அந்தத் தமிழக பக்தர்..? நேரில் ஒப்படைக்கும் சந்திரபாபு நாயுடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கேட்கும்போதே பிரமிப்பா இருக்கு..” திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடியில் 121 கிலோ தங்கம் காணிக்கை.. யார் அந்தத் தமிழக பக்தர்..? நேரில் ஒப்படைக்கும் சந்திரபாபு நாயுடு..!!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ள நிலையில், அந்தப் பக்தரின் சார்பில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று அந்தத் தங்க நகைகளைக் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனாகப் பணம், தங்கம் மற்றும் வைர ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தீவிர ஏழுமலையான் பக்தர் ஒருவர், சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்க முன்வந்துள்ளார். தனது பெயர், முகவரி உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டாம் என அந்தப் பக்தர் கோவில் நிர்வாகத்திடமும் அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து, அந்தப் பக்தரின் சார்பாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தப் பிரம்மாண்டத் தங்க ஆபரணங்களைச் சமர்ப்பிக்க உள்ளார். பெட்டி பெட்டியாகத் திருமலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த 121 கிலோ தங்க ஆபரணங்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெயர் வெளியிட விரும்பாத தமிழக பக்தரின் இந்தப் பிரம்மாண்டக் காணிக்கை பக்தர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in