எப்பா என்னா ஊழல்..? இதெல்லாம் பாத்துகிட்டு உங்க அண்ணன் விஜய் சும்மா விட்ற மாட்டேன்… கல்வி விருது விழாவில் அதிரடி காட்டிய விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எப்பா என்னா ஊழல்..? இதெல்லாம் பாத்துகிட்டு உங்க அண்ணன் விஜய் சும்மா விட்ற மாட்டேன்… கல்வி விருது விழாவில் அதிரடி காட்டிய விஜய்..!!

Published

on

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜய், மாணவர்கள் வாழ்க்கையில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஊழலுக்கு மக்கள் பழகிவிட்டார்கள் என்று கூற முடியாது எனத் தெரிவித்த அவர், ஊழலைக் கட்டுப்படுத்தத் தாங்கள் எடுத்த முயற்சிகளால் சிலரின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளதாகவும், தனது பேச்சை அரசியலாக்க முயற்சிப்பதைப் பற்றிக் கவலையில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாகக் கல்வித்துறையில் நடக்கும் ஊழல்களைக் கடுமையாகச் சாடிய அவர், கும்பகோணம் பள்ளி தீ விபத்தை நினைவுகூர்ந்து பள்ளிகளின் பாதுகாப்பில்கூட ஊழல் செய்வது வேதனையளிப்பதாகக் கூறினார். மேலும், கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதல் முறைகேடு மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஊழல்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர், மற்ற நூலகங்களில் நடந்த முறைகேடுகளும் விரைவில் வெளிவரும் எனத் தெரிவித்தார்.

Advertisement

மாணவர்களின் வாழ்க்கையையே பாதிக்கும் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இறுதியாக, மாணவர்களின் அண்ணனாக இருந்து உங்களை எப்போதும் நல்ல வழியிலேயே வழிநடத்திச் செல்வேன் என்று உறுதியளித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in