LATEST NEWS
26 கிலோ எடையுள்ள ராட்சத குரங்கை வேட்டையாடிய கழுகு… ஆதி மனிதர்களையும் வானிலிருந்து கொத்திச் சென்றதா? விஞ்ஞானிகளை அதிரவைத்த புதிய ஆய்வு..!!
சஹாரா பாலைவனத்தில் உள்ள வடக்கு சாட் பகுதியில், கழுகுகள் சுமார் 26.2 கிலோ எடையுள்ள பெரிய பபூன் குரங்குகளை வேட்டையாடியுள்ள அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கழுகுகளால் 13 கிலோவிற்கு மேல் எடையுள்ள விலங்குகளை வேட்டையாட முடியாது என்றிருந்த 25 லட்சம் ஆண்டு கால அறிவியல் நம்பிக்கையை இந்த புதிய ஆய்வு உடைத்தெறிந்துள்ளது.
இந்த வெரியாக்ஸ் கழுகுகள் அதிக எடையுள்ள பபூன்களைத் தூக்கிச் செல்லாமல், உயரமான பாறைகளில் தனியாக அமர்ந்திருக்கும் அவற்றின் மீது திடீரெனப் பாய்ந்து கீழே தள்ளிவிடுகின்றன. பாறையிலிருந்து கீழே விழுந்து பபூன்கள் உயிரிழந்த பிறகு, கழுகுகள் அவற்றை உணவாக உட்கொள்கின்றன என்பது எலும்புகளில் இருந்த நகக் கீறல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
ஆரம்பகால மனித மூதாதையர்களும் (Australopithecus) இதேபோல் 25 முதல் 30 கிலோ எடையுடன்தான் இருந்தார்கள் என்பதால், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவர்களும் இதுபோன்ற கழுகுகளுக்கு இரையாகியிருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வானிலிருந்து வரும் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவே மனிதர்கள் கூட்டமாக வாழவும், எச்சரிக்கை ஒலிகளை எழுப்பவும் கற்றுக்கொண்டிருக்கலாம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
