பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து அழுதது ஒரு குத்தமா..? ஆறுதல் தேடிச் சென்ற பெண்ணுக்கு ₹2,700 அபராதம் விதித்த அதிகாரிகள்.. ஏன் தெரியுமா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து அழுதது ஒரு குத்தமா..? ஆறுதல் தேடிச் சென்ற பெண்ணுக்கு ₹2,700 அபராதம் விதித்த அதிகாரிகள்.. ஏன் தெரியுமா..??

Published

on

ஜெர்மனியில் 31 வயதான ஹானா என்ற மாணவி, படிப்பு மற்றும் பணக் கஷ்டத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகப் பூங்காவிலுள்ள பெஞ்சில் அமர்ந்து அழுது கொண்டிருந்தபோது, அவருக்கு 25 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ₹2,700) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள விதிகளின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் பூங்காவில் உள்ள இருக்கைகளில், குழந்தைகளுடன் வரும் பெரியவர்கள் மட்டுமே அமர அனுமதி உண்டு. இந்த விதி தெரியாமல் ஹானா தனியாக அமர்ந்திருந்ததால், அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டையை வாங்கி அபராதம் விதித்துள்ளனர்.

Advertisement

ஆறுதல் தேடி அமர்ந்த பெண்ணுக்கு இரக்கமின்றி அபராதம் விதிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவே இந்த விதி கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை மேலும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நகர நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in