LATEST NEWS
“அடக்கடவுளே.. மனுஷங்களுக்கு அடுத்து இப்போ ரோபோவுமா…” பின்னால வந்து செஞ்ச வேலை… கதறிய 16 வயது சிறுமி..! பின்னால வந்து செஞ்ச வேலை… கதறிய 16 வயது சிறுமி..!!
ஜெர்மனியின் கொலோன் நகரில் 16 வயது சிறுமி ஒருவரிடம் ரோபோ ஒன்று தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, காவல்துறையினர் அந்த ரோபோவையும் அதன் உரிமையாளர்களின் தொலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹோஹென்சோலர்ன்ரிங் என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியே சிறுமி தன் நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது, சுமார் 1.2 மீட்டர் உயரமுள்ள, சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான அந்த ரோபோ பின்னாலிருந்து அணுகியுள்ளது. பின்னர் அது அச்சிறுமியிடம் முறையற்ற வகையில் தொட்டு, அருவருக்கத்தக்க அசைவுகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முழு சம்பவத்தையும் ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவரது 19 வயது நண்பரும் படம்பிடித்து சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அருகிலுள்ள காரின் பின்புறப் பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரோபோவையும், அவ்விருவரின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்து, இந்தச் செயல் தொலைவிலிருந்து திட்டமிட்டு இயக்கப்பட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
