CRIME
உச்சகட்ட கொடூரம்.. .. வெறும் 2 மி.மீ சிறுநீரகக் கல்… டாக்டர்கள் செய்த அந்த ஒரு அசாத்திய அலட்சியம்… சிரித்த முகத்துடன் வந்த 26 வயது வழக்கறிஞருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தில் உள்ள மெடிபவர் மருத்துவமனையில் ஐஸ்வர்யா (26) என்ற இளம் பெண் வழக்கறிஞர், சிறுநீரகக் கல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தெலங்கானா அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 2 மில்லிமீட்டர் அளவிலான சிறிய கல்லுக்குச் சிகிச்சை பெறச் சிரித்த முகத்துடன் நடந்து வந்த பெண்ணுக்கு, மருத்துவர்களின் அசாத்திய அலட்சியத்தால் தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளைச்சாவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும், அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்ட போதிலும், லட்சக்கணக்கில் மருத்துவக் கட்டணங்களை வசூலிப்பதற்காக அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் நாடகமாடுவதாகவும், உயிருடன் வந்த பெண்ணை மருத்துவர்களே கொன்றுவிட்டனர் என்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டு தங்களது உச்சக்கட்ட ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் குடும்பத்தினருக்கு இந்த மருத்துவமனையில் இருக்கும் வணிக முதலீட்டுத் தொடர்புகள் மற்றும் அண்மையில் நடந்த பெரும் பங்குகள் விற்பனை முறைகேடுகள் குறித்த அரசியல் புகார்களோடு இணைந்து தற்போது ஒரு மாபெரும் அரசியல் பூசலாக உருவெடுத்துள்ளது. மருத்துவமனையில் தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய வரிசை மரணங்கள் மற்றும் ‘தாகூர்’ பட பாணி கட்டணப் பறிப்பு மோசடிகள் குறித்து எதிர்க்கட்சியான பிஆர்எஸ் (BRS) தலைவர்கள் கடுமையான கண்டனங்களை எழுப்பி, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஏன் மௌனம் காக்கிறார் என்று கேள்வி எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஹைதராபாத் தனியார் மருத்துவமனைகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை முழுமையாகக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இதுகுறித்த முறையான விசாரணைக்கான கோரிக்கைகள் மாநிலம் முழுவதும் வலுத்து வருகின்றன.
