“ஜெய்ப்பூரில் உறையவைக்கும் கொடூரம்”.. தாய், தங்கையைக் கொன்று இளைஞர் தற்கொ**… சுவரில் ஒட்டப்பட்ட காகிதத்தால் மொபைல் போனில் சிக்கிய திடுக்கிடும் மர்மம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“ஜெய்ப்பூரில் உறையவைக்கும் கொடூரம்”.. தாய், தங்கையைக் கொன்று இளைஞர் தற்கொ**… சுவரில் ஒட்டப்பட்ட காகிதத்தால் மொபைல் போனில் சிக்கிய திடுக்கிடும் மர்மம்…!!

Published

on

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் பட்டா பஸ்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமநகர் காலனியில், வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜ் தேவி, அவரது மகள் சிவாங்கி மற்றும் மகன் லக்கி ஆகிய மூவரின் சடலங்கள் ஒரே அறையில் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை யாரும் தொலைபேசியை எடுக்காததால் உறவினர் ஒருவர் அக்கம்பக்கத்தினரைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவ இடத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த காகிதத்தில், “தற்கொலைக்கான காரணம் மொபைல் போனில் உள்ளது” என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் லக்கியின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, அதில் இருந்த தற்கொலைக் குறிப்பில் குடும்பத்தினருக்கு இருந்த மனநலப் பாதிப்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் மனநலப் பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரியவந்ததாகவும், லக்கியின் தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலப் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், அந்தக் குடும்பத்தினர் பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள்ளேயே கழித்து வந்ததும், லக்கி வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது மூவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மொபைல் போன் குறிப்பு, தடயங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in