“சேகர்பாபுவை ஓரங்கட்டுங்க” கொளத்தூர் தோல்விக்குக் காரணமே இவர்தான்.. சேகர்பாபுவுக்கு எதிராகத் தலைமையிடம் வெடித்த திமுகவினர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சேகர்பாபுவை ஓரங்கட்டுங்க” கொளத்தூர் தோல்விக்குக் காரணமே இவர்தான்.. சேகர்பாபுவுக்கு எதிராகத் தலைமையிடம் வெடித்த திமுகவினர்..!!

Published

on

மாவட்டச் செயலாளர், தேர்தல் பொறுப்பாளர் உள்ளிட்ட முக்கியக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து சேகர்பாபுவை முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும் என அப்பகுதி திமுகவினர் கட்சித் தலைமையிடமே நேரிடையாகத் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் அவர்களின் தோல்விக்கு, சேகர்பாபு சக நிர்வாகிகளை உரிய முறையில் மதிக்காததும், தொகுதிப் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அலட்சியம் காட்டியதுமே முக்கியக் காரணம் என உள்ளூர் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகிறார்களாம்.

Advertisement

இத்தகைய உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், ஏற்கனவே கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கிய சேகர்பாபுவின் திமுக மாவட்டத்துடன், தற்போது பெரம்பூர் தொகுதியும் இணைக்கப்பட்டுள்ளது அப்பகுதி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in