LATEST NEWS
தமிழ்நாட்டுக்காக உச்சநீதிமன்ற உத்தரவைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார் CM விஜய்… திமுகவை விட தவெக… திமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு வன்னியரசு அதிரடி..!!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த திமுக அரசைவிட தற்போதைய தவெக அரசு மிகச் சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டுள்ளதாக அமைச்சர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மாநில உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் சனாதன சக்திகள் இருப்பது வெளிப்படையாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் சனாதன சக்திகளை மிகச்சிறப்பாகக் கையாண்டதுடன், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவைத் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக அமைச்சர் வன்னியரசு பாராட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பாஜக அரசு சிஆர்பிஎப் (CRPF) படையை அனுப்பியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சூழலிலும் தவெக அரசு இவ்விவகாரத்தை மிகத் துணிச்சலாகக் கையாண்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
