“என் மீது வழக்குப் பாயும் என்பது தெரியும், ஆனாலும் சொல்கிறேன்…” உச்சநீதிமன்றத் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்த வைகோ.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மீது வழக்குப் பாயும் என்பது தெரியும், ஆனாலும் சொல்கிறேன்…” உச்சநீதிமன்றத் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்த வைகோ.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்களா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். நீதிமன்றங்களைப் பற்றி விமர்சித்தால் தன் மீது வழக்குப் பாயும் என்பது தனக்குத் தெரியும் என்றும், ஆனால் நீதிமன்றங்கள் தங்களது எல்லையைத் தாண்டிச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நூறாண்டு காலமாகத் தர்காவுக்குப் பக்கத்திலேயே அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், இப்போது எதற்காகப் புதிதாக மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றச் சொல்கிறீர்கள் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.”அப்படியானால், இந்து – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்களா? அல்லது இந்துத்துவா சக்திகளின் சதித்திட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது” என்று அவர் தனது உரையில் காட்டமாகச் சாடினார்.

Advertisement

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நடந்துகொண்ட விதம் சிறிதும் நியாயமானது அல்ல என்றும், அது நீதியும் அல்ல, மதச்சார்பின்மையைக் காக்கின்ற போக்கும் அல்ல என்றும் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் கூறிய வைகோவின் இந்தப் பேட்டி தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in