CRIME
“பள்ளி சீருடையில் வா…” டேட்டிங் ஆப்பில் பழகிய 14 வயது சிறுமி… ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து சீரழித்த 6 கொடூரர்கள்.. வெளியான பகீர் பின்னணி..!!
ஹாங்காங்கில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 14 வயதுப் பள்ளி மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், ஆசிரியர், தீயணைப்பு வீரர், பொறியியல் பயிற்சி மாணவர் மற்றும் யூடியூபர் உள்ளிட்ட 6 பேருக்கு ஹாங்காங் உயர் நீதிமன்றம் நவம்பர் 26 அன்று சிறைத்தண்டனை விதித்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் டேட்டிங் ஆப்பைப் பயன்படுத்திய சிறுமியிடம், வெவ்வேறு வயதுடைய ஆறு ஆண்கள் நெருக்கமாகப் பழகி, சிறுமியின் வயது தெரிந்திருந்தும் பாலியல் அத்துமீறல் மற்றும் பல்வேறு தொல்லைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் விசாரணைக்கு முன்பே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மற்ற ஐந்து பேரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
குற்றத்தை முதலில் ஒப்புக்கொண்ட 40 வயது ஆசிரியர் மான் கா-விங் என்பவருக்கு, தண்டனையில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு 20 மாதங்கள் மற்றும் 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; அவர் சிறுமிக்கு 14 வயது என்பது தெரிந்தும் பள்ளிச் சீருடையுடன் வருமாறு கேட்டதுடன், ஆபாச வீடியோக்கள் மற்றும் இரண்டு நிர்வாணப் புகைப்படங்களையும் எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் பதிவாகின. மற்ற குற்றவாளிகளில், பாடம் சொல்லித் தருவதாகக் கூறி தவறாக வழிநடத்திய 24 வயது பொறியியல் பயிற்சி மாணவர் என்ஜி கை-சிங்கிற்கு 30 மாதங்களும், சிறுமியின் எதிர்ப்பையும் மீறித் தொடர்ந்து கட்டாயப்படுத்திய 31 வயது தீயணைப்பு வீரர் சோ கிட்-டிங்கிற்கு அதிகபட்சமாக 54 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 28 வயது யூடியூபர் வோங் பாக்-ஹாங்கிற்கு 33 மாதங்களும், 28 வயது தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் 33 வயது அரசு ஊழியர் ஆகியோருக்குத் தலா 30 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.
தண்டனை அறிவிப்பின்போது சிறுமியின் மனநலப் பாதிப்புகள் குறித்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, வீட்டிலும் பள்ளியிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த சிறுமி இணையத்தில் அன்பையும் அங்கீகாரத்தையும் தேடியதாகவும், பின்னர் ஏமாற்றப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் ஆளானதாகவும் தெரிவித்தார். குற்றவாளிகள் சிறை சென்றதற்குத் தானே காரணம் என்ற குற்றவுணர்ச்சி, நீதிமன்ற நடவடிக்கைகள் மீதான பதற்றம், ஊடகச் செய்திகள் மற்றும் இணையத்தில் வெளியான புண்படுத்தும் கருத்துகள் ஆகியவை அவரது மனநிலையை மேலும் பாதித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
