“சுயமரியாதை போச்சா?”.. இப்போது எங்கே போனது தி.மு.க.-வின் தெம்பு.. த.வெ.க. பரபரப்பு கேள்வி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சுயமரியாதை போச்சா?”.. இப்போது எங்கே போனது தி.மு.க.-வின் தெம்பு.. த.வெ.க. பரபரப்பு கேள்வி…!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.-வின் திட்டத்தை தி.மு.க. வரவேற்று ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் தி.மு.க.-வைக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதே சுயமரியாதை என்றும், பா.ஜ.க.-வுடன் ஒட்டும் உறவும் இல்லை என்றும் பேசிய தி.மு.க., இப்போது திட்டம் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே எனக் கூறி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகத் த.வெ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இந்த முடிவு இன்று எடுக்கப்பட்டதல்ல என்றும், தி.மு.க. தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனக் கூறுவதன் மூலம் பா.ஜ.க.-வுடன் கொண்டிருந்த மறைமுக உறவு தற்போது நேரடி உறவாக மாறியுள்ளதைத் தி.மு.க.-வே வெளிப்படுத்திவிட்டதாகவும் த.வெ.க. பதிவில் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு பா.ஜ.க.-வின் காலடியில் தி.மு.க. வீழ்ந்துவிட்டதாகத் த.வெ.க. தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின்போதே கூறியதை இது உறுதி செய்வதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பெரியார் மற்றும் அண்ணாவின் பெயர்களைச் சுயநல ஆதாயத்திற்காக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள த.வெ.க., “இப்போது எங்கே போனது தி.மு.க.-வின் கெத்து?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. தங்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே பா.ஜ.க.-வுடன் தி.மு.க. இணக்கமாகச் செயல்படுவதாகவும், இதற்கு வரும் தேர்தல்களில் மக்களும் சிறுபான்மையினரும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் த.வெ.க. விமர்சித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in