“பட்டப்பகலில் நடுரோட்டில் துப்பாக்கிச் சூடு”… 30 குண்டுகள் பாய்ந்தும் தப்பிய உயிர்… பெரு நாட்டில் இந்தியர் பயணித்த சொகுசு கார் மீது நடந்த திகில் தாக்குதல்…!! – cinefeeds
Connect with us

CRIME

“பட்டப்பகலில் நடுரோட்டில் துப்பாக்கிச் சூடு”… 30 குண்டுகள் பாய்ந்தும் தப்பிய உயிர்… பெரு நாட்டில் இந்தியர் பயணித்த சொகுசு கார் மீது நடந்த திகில் தாக்குதல்…!!

Published

on

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவுக்கு அருகிலுள்ள காலாவோ பிராந்தியத்தின் கோஸ்டா வெர்டே நெடுஞ்சாலையில், காலை சுமார் 6.30 மணியளவில் விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த குண்டு துளைக்காத சொகுசு கார் மீது ஆயுதக் கும்பல் தாக்குதல் நடத்தியது. பின்னால் வந்த கார் ஜீப் மீது மோதியதைத் தொடர்ந்து, மற்ற வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் காரைச் சுற்றிவளைத்து 30-க்கும் மேற்பட்ட குண்டுகளைச் சுட்டுள்ளனர். இதில் 29 வயதான இந்தியர் விஜய் பக்ரானி இசா மற்றும் அவருடன் பயணம் செய்த 35 வயதான மாரி நட்டலி மிராண்டா எஸ்பினோசா ஆகியோர் காயமடைந்தனர்.

குண்டு துளைக்காத கண்ணாடி உடனடியாக உடையாத நிலையில், துப்பாக்கியின் பின்பகுதியால் பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்த கொள்ளையர்கள், காரில் இருந்த நகைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். குறைந்தது எட்டுப் பேர் மற்றும் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தப்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் வீசிய செல்போன்களின் இடங்களைக் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் கண்டறிந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது உடல்நிலை சீராக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளில் விலைமதிப்புள்ள உலோக ஏற்றுமதி வணிகத் தொடர்புகள் இருப்பதாகவும், கடந்த 2021-ஆம் ஆண்டில் தொடர்புடைய நிறுவனத்திடம் தங்கக் கொள்ளை நடந்ததாகவும் தெரிய வந்துள்ளது . பழைய சம்பவத்துக்கும் இத்தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்றும், அவர்களை முன்கூட்டியே பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in