CRIME
சற்றுமுன் கோர விபத்து: கோயிலுக்குச் சென்றபோது காத்திருந்த எமன்.. அப்பளமாக நொறுங்கிய ஸ்கார்பியோ கார்… 13 பக்தர்கள் உடல் நசுங்கிப் பலியான கோரம்!
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கோரச் சாலை விபத்தில் 13 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நாலந்தா பகுதியைச் சேர்ந்த 14 பக்தர்கள், வழிபாட்டிற்காக ஸ்கார்பியோ கார் ஒன்றில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களது கார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்கார்பியோ கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோர மோதலில் ஸ்கார்பியோ கார் முற்றிலும் அப்பளமாக நொறுங்கியதுடன், காருக்குள் பயணித்த 3 பெண்கள் உட்பட 13 பேர் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிர் தப்பிய எஞ்சிய ஒரு நபரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
